படைப்பாளிகளின் தொகுப்பு முயற்சிகளுக்கு துணை நிற்கும் நிறுவனம் தமிழ் அலை.
அழகிய, தரமான அச்சு முயற்சிகளுக்கு தொடர்புக்கொள்ளுங்கள் tamilalai@gmail.com

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2008

இசாக்கின் ‘மௌனங்களின் நிழற்குடை’ கவிதை நூல் வெளியீட்டு விழா.

இசாக்கின் ‘மௌனங்களின் நிழற்குடை’ கவிதை நூல் வெளியீட்டு விழா
கவிஞர் இசாக் எழுதிய ‘மௌனங்களின் நிழற்குடை’ கவிதை நூல் வெளியீட்டு விழா 22.08.2008 வெள்ளிக்கிழமை துபாய், கராமா சிவ்ஸ்டர் பவன் உணவக விழா அரங்கில் நடைப்பெற்றது. இந்நிகழ்விற்கு அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை தலைவர் மீரா. அப்துல் கதீம் தலைமை வகித்தார். விழாவிற்கு வந்திருந்தோரை பேரவையின் விழா ஒருங்கிணைப்பாளர் வெ. பாரத் வரவேற்றார்.

கவிஞர் இசாக்கை அவையோருக்கு அறிமுகப்படுத்தும் வகையில் தாய்மண் வாசகர் வட்ட அமைப்பாளர் கவிஞர் சே. ரெ. பட்டணம் மணி ‘கவிதை எழுதும் இசாக்’ என்னும் தலைப்பிலும், அமீரகத் தமிழ் மன்ற தலைவர் விமர்சகர் ஆசிப் மீரான் ‘இசாக் எழுதிய கவிதை’ என்னும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.




அதன் பின் கவிஞர் பேரவையின் தலைவர் மீரா.அப்துல் கதீம் நூலை வெளியிட காயிதே மில்லத் பேரவை செயலாளர் குத்தாலம் லியாகத் அலி பெற்றுக்கொண்டார்.

நூல் வெளியீட்டிற்கு பிறகு கவிஞர் நண்பன் வழங்கிய நூல் பற்றிய ஆய்வுரையில் நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளின் தன்மைகள் பற்றியும் இனி இசாக் கவனத்தில் கொள்ள வேண்டிய கவிதை நெறிகள் பற்றியும் விரிவாக பேசினார், அவரைத் தொடர்ந்து ஆய்வுரை வழங்கிய கவிஞர் மு.முத்துகுமரன் அவருக்கு பிடித்த கவிதைகளைக் குறிப்பிட்டு அவை உணர்த்தும் கருத்துகளை விளக்கி நூலில் இடம் பெற்றுள்ள படங்கள் வாசிப்பவனின் ரசனையை இடையூறு செய்கிறது என்றார்.

அமீரகத் தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்களான முத்தமிழ்வளவன், சி.கருணாநிதி (தாய்மண் வாசகர் வட்டம்), கலையன்பன் (சங்கமம் தொலைக்காட்சி), தாகா (துபாய் தமிழ்ச் சங்கம்) அன்வர் பாட்சா (வளைகுடா தமிழர் பேரவை) ரகுராஜ் (சுடர்வம்சம்) அப்துல் காதர்( உ.அ.கு தமிழர் நற்பணி மன்றம்) காவிரிமைந்தன் (வானலை வளர்தமிழ்) தொழிலதிபர் ஆலிம் செல்வன், எம். அப்துல்ரகுமான் (ஈமான்) மற்றும் சமூக ஆர்வலர்கள் இஸ்மத், எஸ்.எம்.பாரூக் உள்ளிட்ட சான்றோர்கள் வாழ்த்தும்,கருத்தும் சொல்ல, கவிஞர் இசாக்கின் ஏற்புரைக்குப்பின் குமார் நன்றியுரை ஆற்ற விழா நிறைவடைந்தது.

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2008

இசாக் எழுதிய மௌனங்களின் நிழற்குடை



அன்பிற்கினிய தோழருக்கு
எனது ''மழை ஓய்ந்த நேரம்''
அய்க்கூ தொகுப்பைத் தொடர்ந்து
சமீபத்தில் எழுதியுள்ள
''மௌனங்களின் நிழற்குடை''
என்னும் கவிதைத் தொகுப்பின்
வெளியீட்டு விழா வருகிற 22-08-2008 அன்று
துபாய்யில் அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில்
நடைபெற உள்ளது.
விழா அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளேன்.
தங்களின் அன்பான வருகையையும்
ஆலோசனையையும் எதிர்நோக்கி..
அன்புடன்
இசாக்

வெள்ளி, 25 ஜூலை, 2008

உயிர்த்துளி - மு.முத்துகுமரன் .தமிழ் அலை 3


நண்பர் முத்துகுமரனின் முதல் கவிதை தொகுப்பு

தமிழ் அலையில் மூன்றாம் வெளியிடாக

வெள்ளி, 11 ஜனவரி, 2008

விரியக் காத்திருக்கும் உள்வெளி / நண்பன் (தமிழ் அலை-02)

விரியக் காத்திருக்கும் உள்வெளி / நண்பன்

நூல் கிடைக்குமிடம்:

இலக்கியம்

141.ஆ. லெனின் வீதி,

குயவர்பாளயம்,

புதுச்சேரி-605 013

வெள்ளி, 9 நவம்பர், 2007

தும்பிக்காரன் - கவிமதி (தமிழ் அலை- 1)


பதிப்புரை


ஜப்பான் வடிவத்தின் இறக்குமதி எனப் பேசப்பட்டாலும், எவரும் எதிர்பாராத வேகத்தில் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன அய்க்கூ நூல்கள்.


அற்புதமான கிராமிய சூழலை அப்படியே படம்பிடித்து தமிழுலகுக்கு காட்டிட பொருத்தமானதாக இவ்வடிவமிருப்பதால்... இயற்கையின் இனிய அரவணைப்பில் வளர்ந்த தமிழ்க்கவிஞர்களால் அய்க்கூ வடிவம் கூடுதலாய் பயன்படுத்தப்படுவது ஆச்சர்யப்படுவதற்கில்லை.


இந்த அடிப்படையில் இலக்கியவுலகுக்கு வருபவர்தான் கவிமதி.

அசன்பசர் என்று ஏற்கனவே இரு தொகுப்புகளின் மூலம் அறிமுகமான இவர், கவிமதியாகி கவிதைப்பயணத்தை தொடர்கிறார்.


தமிழின் முதல் அய்க்கூ நூலுக்கு சொந்தக்காரரான இலட்சியக்கவி அறிவுமதியின் அன்பை குடித்து இலக்கிய தாகத்தை தீர்த்துக்கொள்கிற இவர், சிறப்பான பல நல்ல நூல்களை தமிழுலகுக்கு கொடுத்து இலக்கிய உலகில் தனி இடத்தைப் பிடிப்பார் என்கிற நம்பிக்கையை தும்பிக்காரன் தருகிறது.


தமிழ்அலையின் முதல் வெளியீடாக கவிஞர் கவிமதியின் தும்பிக்காரன் வெளிவருவது மகிழ்வுக்குறியது. வாசகத் தோழர்கள் புதிய படைப்பாளிகளை ஆதரித்து ஊக்கப்படுத்த வேண்டும். இதன் மூலமே தமிழர் வாழ்க்கைமுறை வரலாறாக மாற்றம் பெற வைக்கமுடியும்.


தமிழ்அலை

உளுந்தூர் பேட்டை.


தொடர்பு முகவரி:

சி.சுந்தரபாண்டியன்

கோனான்குப்பம்-606 104

திருமுதுகுன்றம் வட்டம்

கடலூர் மாவட்டம்.

வெள்ளி, 23 மார்ச், 2007

தமிழ் அலை இலக்கிய அலை

தமிழ் அலை ஊடக உலகம்
தமிழ் இலக்கிய உலகில் புதிய கோணத்தில் இயங்க முற்படும்.
தமிழர் வாழ்வுக்கான கலை இலக்கிய பதிவுகளுக்கு முன்னுரிமை அளித்து தொடர்ந்து இயங்கும்.
Tamil News & Entertainment Web Portal